திருவெண்ணெய்நல்லூர் அருகே வாகனம் மோதி விவசாயி பலி
திருவெண்ணெய்நல்லூர் அருகே வாகனம் மோதி விவசாயி பலியானர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-21 09:58 GMT
பலியான விவசாயி
திருவெண்ணைநல்லுார் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி விவசாயி இறந்தார். திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பெரியசேவலை கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை. விவசாயியான இவர் நேற்று காலை 11 மணியளவில் மாட்டுக்கு, பெரியசேவலை - திருவெண்ணெய்நல்லுார் சாலையில் திரு உள்ள விவசாய நிலத்தில் புல் அறுத்துக் கொண்டு வீட்டிற்கு நடந்து சென்றார்.
அப்போது அடையாளம் தெரியாத வாகனம் அண்ணாமலை மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. உடன், அண்ணாமலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். வழியில் அண்ணாமலை இறந்தார்.