விவசாய நிலத்திற்கு பைப்லைன் மூலமாக தண்ணீர் கொண்டு செல்ல விவசாயி மனு

விவசாய நிலத்திற்கு பைப்லைன் மூலமாக தண்ணீர் கொண்டு செல்ல விவசாயி மனு.

Update: 2024-03-18 11:49 GMT
கரூர் மாவட்டம், குளித்தலை, அய்யர்மலை பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி விவசாயி. இவருக்கு அருகில் உள்ள சத்தியமங்கலம் ஊராட்சி பகுதியில் சுமார் 15 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் நெல், கடலை, சோளம் போன்ற விவசாயம் செய்தும், கால்நடைகளை வளர்த்தும் வருகிறார். விவசாயத்திற்கு பயன்படுத்துவதற்காக அருகிலுள்ள கருங்களாப்பள்ளி பகுதியில் உள்ள கிணற்றிலிருந்து சுமார் 550 மீட்டர் தொலைவிற்கு பைப்லைன் அமைத்து விவசாயம் செய்து வருகிறார். பைப் லைனை கொண்டு செல்வதற்காக, சம்பந்தப்பட்ட ஊராட்சியிலும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் முறையாக அனுமதி பெற்று, அதற்குரிய கட்டணங்களையும் செலுத்தி தண்ணீரை பாய்ச்சி விவசாயம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், மாயனூரில் இருந்து காவிரி-குண்டாறு அமைக்கும் திட்டத்திற்காக, நிலம் கையகபடுத்தி அதில் வாய்க்கால் வெட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த வாய்க்கால் ராமசாமி அமைத்துள்ள பைப் லைன் பகுதியை கடந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால், தனது நிலத்திற்கு ஆதாரமாக இருக்கும் தண்ணீரை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்படும். எனவே, மாவட்ட நிர்வாகம் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து தனது மனுவை மாவட்ட நிர்வாகம் அமைத்த பெட்டியில் செலுத்தி உள்ளார். ஏற்கனவே மாவட்ட நிர்வாகத்திடம் நேரடியாக அளிக்கப்படும் மனுக்களுக்கு 15 நாட்களில் தீர்வு காண்பதாக ஒப்புதல் ரசீது அளித்தும், காலதாமதமாக தான் தீர்வு காணப்பட்டு வருகிறது. தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மேலும் காலதாமம் செய்யாமல், உடனடியாக தனது நிலத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
Tags:    

Similar News