தாளவாடி அருகே விவசாயி தற்கொலை
தாளவாடி அருகே தருமபுரத்தைச் சேர்ந்த விவசாயி கோவிந்தன் தற்கொலை செய்துகொண்ட நிலையில், போலீஸ் விசாரணை நடக்கிறது.;
Update: 2024-05-01 12:54 GMT
பைல் படம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே உள்ள தருமபுரத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் இவருடைய மகன் ராஜசேகர் 27 விவசாயி இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் சம்பவத்தன்று ராஜசேகர் வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கு போட்டுக் கொண்டால் இதை கண்டதும் வீட்டில் இருந்தவர்கள் ராஜசேகரை மீட்டு சிகிச்சைக்காக தாளவாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சையாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி ராஜசேகர் நேற்று முன்தினம் உயிரிழந்தார் இதுகுறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜசேகர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.