மதுரை வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்ட முயன்ற விவசாய சங்கத்தினர் கைது
மதுரை வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்ட முயன்ற விவசாய சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.;
Update: 2024-02-27 10:10 GMT
விவசாய சங்கத்தினர் கைது
மதுரை வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்ட முயன்ற விவசாய சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழகம் வந்துள்ளார் பிரதமர் மோடி.இதன் ஒரு பகுதியாக இன்று மதுரை வந்துள்ளார்.இந்நிலையில் விவசாயிகளுக்கு கடந்த கால தேர்தல் வாக்குறுதியில் கூறியவற்றை நிறைவேற்றாமல் மத்திய அரசு வஞ்சிப்பதைக் கண்டித்து பிரதமர் மோடியின் தமிழக வருகையை எதிர்த்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியில் விவசாய சங்கத்தினர் கருப்புக்கொடி காட்ட முயன்றவர்களை போலிசார் கைது செய்தனர்.இதில் விவசாய சங்கத்தினர் 10 பேர் கைது செய்யப்பட்டு செக்காணுரணி காவல்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.