தாராபுரத்தில் விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்க கோரி விவசாயிகள் இரண்டாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.;

Update: 2024-01-27 08:50 GMT

காத்திருப்பு போராட்டம்

75-ஆவது குடியரசு தினத்தை யொட்டி இன்று சட்ட மேதை அம்பேத்கர் திருவுருவ படத்தை கையில் ஏந்தி சட்டப்படி தண்ணீர் வழங்க வேண்டும் என கோஷமிட்டனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையில் இருந்து பிஏபி பாசனத் திட்டத்தில் உபரி நீரைத் திறந்துவிடக்கோரி விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் விவசாயி களை 4 முறை பேச்சுவார்த் தைக்கு அழைத்து பின்னர் கடைசி நேரத்தில் கூட்டத்தை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் 200-க்கும் மேற்பட்டோர் உப்பாறு அணையின் உட்பகுதியில் இறங்கி 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

இந்த இரண்டாவது நாள் போராட்டத்தில் 75-ஆவது குடியரசு தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சட்டமேதை அம்பேத்கர் அனைவருக்கும் சமம் என சட்டம் இயற்றினார். சட்டப்படி அனைவரும் நடக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.ஆனால் உப்பாறு பாசன விவசாயிகளுக்கு சட்டப்படி வழங்கக்கூடிய இரண்டு டிஎம்சி தண்ணீரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் வழங்காமல் ஏமாற்றுவதாகவும். அதனால் சட்டமேதை அம்பேத்கரின் சட்டத்தையே பொதுப்பணித்துறை அதிகாரிகள் அவமானப்படுத்துவதாகவும் கருதி சட்டமேதை அம்பேத்கரின் திருவுருவப்படத்தை கையில் ஏந்தி அணைக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என கோஷமிட்டனர்.இதனால் உப்பாறு அணை பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News