நபார்டு வங்கி சார்பில் விவசாயிகள் கலந்துரையாடல், கருத்தரங்கு

இந்தியா 400 மில்லியன் டன் விவசாய உற்பத்தியை நோக்கி முன்னேறி கொண்டிருக்கிறது,'' என விருதுநகரில் நபார்டு இயக்குனர் ராமஸ்ரீனிவாசன் கூறினார்.

Update: 2023-12-28 07:52 GMT

நபார்டு இயக்குனர் ராம ஸ்ரீனிவாசன்

விருதுநகரில் நபார்டு வங்கி சார்பில் விவசாயிகளுடன் கலந்துரையாடல், கருத்தரங்கு நபார்டு இயக்குனர் ராமஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றது நபார்டு வங்கி சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டு வருவதாகவும், இந்தியாவில் மட்டும் தான் எந்நேரமும் பால் கிடைக்கிறது எனவும், அதற்கு சிறந்த உதாரணம் கொரோனா நேரத்தில் கூட பால், உணவு பஞ்சம் இல்லாமல் விளைபொருட்கள், காய்கறி வகைகள் கிடைத்தன.இந்த தட்டுபாடில்லா விவசாய உற்பத்திக்கு விவசாயிகளே காரணம்.

தற்போது 350 மில்லியன் டன் விளைபொருள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியா சுதந்திரத்தின் போது 45 மில்லியன் டன் உற்பத்தி செய்யப்பட்டது. உணவு பற்றாக்குறை இருந்தது. இப்போது நாம் முன்னேறி விட்டோம். பிரதமர் மோடி ஐ.நா., ஒத்துக் கொண்டால் ஏழை நாடுகளுக்கு உணவளிக்க தயார் என்றார். மேலும் நம் நாடு 400 மில்லியன் டன் விவசாய உற்பத்தியை நோக்கி முன்னேறி கொண்டிருக்கிறது. விவசாயிகள் உலகளாவிய சந்தையை பற்றி தெரிந்து கொண்டு உற்பத்தி முறைகளை பெருக்க வேண்டும். மதிப்பு கூட்டு பொருட்களை தயாரிக்க வேண்டும்.இயற்கை விவசாயத்தை அதிகப்படுத்த வேண்டும் என பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் நபார்டு வங்கியின் தலைமை பொது மேலாளர் சங்கர் நாராயண், வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வி ரமேஷ், கால்நடை பல்கலை விரிவாக்க மைய பேராசிரியர் பழனிச்சாமி, கயிறு உற்பத்தி வாரிய ஓய்வு மண்டல இயக்குனர் பூபாலன், முன்னோடி வங்கி மேலாளர் பாண்டி செல்வன் ஆகியோர் பயிர் பாதுகாப்பு முறைகள், கடன் திட்டங்கள், மீன் வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு குறித்து பேசினர். தமிழக தேசிய விவசாயிகள் சங்க தலைவர் சுப்பிரமணி, பா.ஜ., கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் பங்கேற்றனர். மாவட்ட வளர்ச்சி மேலாளர் ராஜ சுரேஷ்வரன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News