சிப்காட்க்கு நிலம் தர மறுத்து ஆட்சியரிடம் விவசாயிகள் பிரமாண பத்திரம் தாக்கல்

சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க நிலம் தரமாட்டோம் என மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனா்

Update: 2023-12-04 11:00 GMT

சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க நிலம் தரமாட்டோம் என மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனா்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நாமக்கல் மாவட்டம் மோகனூர், தாலுக்கா வளையப்பட்டி பகுதியில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களை பாதிக்கும் வகையில், மாநில அரசு, சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, அப்பகுதியை சேர்ந்த சுமார் 220 விவசாயிகள், மாவட்ட கலெக்டரை சந்தித்து, சிப்காட் அமைக்க நிலம் தர மாட்டோம் எனக் கூறி, பிரமாண பத்திரங்களை அளித்தனர். வளையப்பட்டி அருகே 820 ஏக்கர் பரப்பளவில் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க தமிழ்நாடு அரசு நிலம் தேர்வு செய்து வருகிறது. இந்த நிலையில் அப்பகுதியில் சிப்காட் அமைக்க கூடாது என்பதை வலியுறுத்தி ஏராளமான விவசாயிகள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, விவசாய முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் செல்ல. ராசாமணி தலைமையில் வளையப்பட்டி சுற்றுவட்டார பகுதியில் சிப்காட் அமைப்பதாக கூறப்படும் பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள், தங்கள் நிலங்களில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க கூடாது., அதற்கு நிலங்களை தரமாட்டோம் எனக் கூறியும் தங்கள் நிலைப்பாட்டை தெரிவித்து பிரமாண பத்திரங்களை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமாவை நேரில் சந்தித்து தனித்தனியாக, பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தனர்.

Tags:    

Similar News