கெங்கவல்லி வட்டார விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன்பெற அழைப்பு

கெங்கவல்லி வட்டார விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம் என கெங்கவல்லி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-10-20 08:11 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கெங்கவல்லி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தவமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கனமழை, வறட்சி, புயல், சூறாவளி, பூச்சி நோய் தாக்குதலில் மக்காச்சோளம், நெல், பருத்தி சேதமடையும் பட்சத்தில், பயிர் காப்பீடு பெறலாம். நெல் பயிருக்கு ஏக்கருக்கு 352ம், மக்காச்சோளத் திற்கு 7480ம், பருத்தி பயி ருக்கு 3674ம் பிரிமியம் தொகை செலுத்த வேண்டும். நெல் பயிருக்கு காப்பீடு செய்ய 15.11.2023ம் தேதியும், மக்காச்சோளம் மற்றும் பருத்திக்கு காப்பீடு செய்ய 31.10.2023ம் தேதியும் கடைசி நாளாகும். எனவே, கெங்கவல்லி வட்டார விவசாயிகள் தங்களது கணினி சிட்டா நகல், வங்கிக் கணக்கு புத்தகம் நகல், ஆதார் நகல், உறுதிமொழி படிவம், அடங்கல் ஆகியவற்றுடன் அருகிலுள்ள பொது சேவை மையத்தையோ, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தையோ அல்லது அரசுடமையாக்கப்பட்ட வங்கி ஆகியவற்றில் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, கெங்கவல்லி வட்டார வேளாண்மை விரிவாக்கம் மையம் மற்றும் தம்மம்பட்டி துணை வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News