என்பிகேஆர்ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலை ஜப்தி நடவடிக்கையை எதிர்த்து விவசாயிகள் போராட்டம்

என்பிகேஆர்ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலை 11 கோடி ரூபாய் வழங்க நீதிமன்ற உத்தரவு மூலம் ஜப்தி நடவடிக்கைக்கு வந்தவர்கள் விவசாயிகள் போராட்டத்தால் திரும்பினர்.

Update: 2023-11-30 13:19 GMT

விவசாயிகள் போராட்டம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மயிலாடுதுறை அருகே தலைஞாயிறு சர்க்கரை ஆலை, 1987ஆம் துவங்கப்பட்டது.     1993ஆம் ஆண்டு, 1500டன் கரும்பு பிழியும் திறனை, 3500 டன் கரும்பு பிழியும் திறன்கொண்டதாக மாற்றப்பட்டது, அந்த வேலையை,  தனியார் நிறுவனம் ஒன்று செய்துள்ளது.

ஆனால் 3500 டன் முழு கொள்ளளவு அரைக்க இயலாததால், ஆலை நட்டத்தில் இயங்கியது.    தனியார் நிறுவனத்திற்கு 4 கோடி ரூபாய் பாக்கியை ஆலை நிர்வாகம் வழங்கவில்லை. இதுகுறித்து உச்சநீதிமன்றம்வரை தனியார் நிர்வாகம் சென்று, ரூபாய் 11 கோடியை ஆலை நிர்வாகம் வழங்கவேண்டும் என்ற தீர்ப்பை வாங்கியது. இதற்கிடையே கடந்த 2017ஆம் ஆண்டு ஆலை மூடப்பட்டுவிட்டது.     

நீதிமன்ற தீர்ப்பை ஆலை நிர்வாகம் மதிக்காததால் ,  மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்றம் மூலம், தனியார் நிறுவனத்தினர் நிறைவேற்றுமனு அளித்தனர்,   , இதனால் என்பிகேஆர்ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின், கட்டிடம் மற்றும் நிலங்களை, கையகப்படுத்த அதன் மதிப்பை அறிவதற்கு, உத்தரவிட்டது, அதன் அடிப்படையில், கடந்த 22ஆம் தேதி  மயிலாடுதுறை நீதிமன்ற ஊழியர்கள், வருவாய்துறை அலுவலர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் என 15க்கும்மேற்பட்டோர் ஆலையின் கட்டிடம் மற்றும் சில பகுதிகளின் மதிப்பீடு பணியை மேற்கொண்டனர்.

இதைக் கேள்விப்பட்ட கரும்பு விவசாயிகள்,   ஆலை முன்பாக, கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர், காசிநாதன் தலைமையில் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று மீண்டும் அதே ஊழியர்கள், ஜப்தி நடவடிக்கை பணிகளை, மேற்கொண்ட பொழுது, தமிழ்நாடு விவசாய சங்க மாநில செயலாளர் துரைராஜ், கரும்பு விவசாயிகள் மாநில சங்க தலைவர் வேல்மாறன், கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாய சங்க செயலாளர் முருகன், உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர், ஆலை முன்பாக ஆர்ப்பாட்டம் செய்தனர். ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ள வந்த நபர்கள் அனைவரும் திரும்பிச் சென்றனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags:    

Similar News