அத்துமீறி தாக்கிய அலுவலரை கண்டித்து விவசாயிகள் போராட்டம்

திருப்பூர் உழவர் சந்தையில் விவசாயியை அத்துமீறி தாக்கிய நிர்வாக அலுவலர் மணிவேலை கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு உண்டானது.

Update: 2024-04-10 13:06 GMT

திருப்பூர்  தெற்குஉழவர் சந்தை விவசாயியை தாக்கியநிர்வாக அலுவலர் மணிவேல் முருகன் விவசாயிகளிடம் பகிரங்கமாக  மன்னிப்பு கேட்டால் மட்டுமே தராசை பெற்றுக் கொள்வதாக கூறி இன்று 800 - க்கும் விவசாயிகள் சந்தப்பேட்டையில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம். பரபரப்பு. திருப்பூர் சந்தைப்பேட்டையில்  தெற்கு உழவர் சந்தை செயல்படுகிறது.

இந்த தெற்கு உழவர் சந்தையில் வளாகத்தில் 81 கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.திருப்பூர்  தெற்கு அவிநாசி பாளையம்,அழகுமலை, கண்டியன் கோவில் ,பெருந்தொழுவு, இடுவாய், பொங்கலூர் பகுதியில் விளைவிக்கக்கூடிய விவசாயிகள் விளை பொருட்களை இங்கு அதிகாலை 3 மணி முதல் கொண்டு வந்து விவசாயிகள் விற்பனை செய்வது வருகின்றனர்.நேற்று தெற்கு உழவர் சந்தை வளாகத்தில் வியாபாரிகள், விவசாயிகள் போர்வையில் அதிக அளவில் உள்ளனர் ,

அந்த வியாபாரிகளை வெளியேற்றுங்கள் என என கேள்வி கேட்ட தெற்கு அவிநாசி பாளையத்தை சேர்ந்த விவசாயி கன்னி முத்து என்பவரை தரக்குறைவாக பேசிய தெற்கு உழவர் சந்தையின் நிர்வாக அலுவலர் மணிவேல் முருகன் விவசாயியை தாக்கி காவலர் முன்னிலையில் வெளியேற்றினார்.இந்த சம்பவம் பற்றிய  விவசாயியை தாக்கும்  காட்சியானது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் திருப்பூர் தெற்கு உழவு சந்தைஅலுவலகத்தில் நேற்று நடந்த விவசாயி கன்னிமுத்து மீதான தாக்குதல் நடத்திய நிர்வாக அலுவலர் மணிவேல் முருகன்  மீது நடவடிக்கை எடுக்க கோரி வேளாண் துறை டெபுட்டி டைரக்டர் மீனாம்பிகை தலைமையில் பேச்சுவார்த்தைநடைபெற்றது.

இந்த பேச்சு வார்த்தையில் உழவர் உழைப்பாளர் கட்சி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் உட்பட அனைத்து விவசாய அமைப்புகளும் கலந்து கொண்டன.திருப்பூர் தெற்கு அவிநாசி பாளையத்தை சேர்ந்த விவசாயி கன்னிமுத்துவை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி அவர் மீது தாக்குதல் நடத்திய தெற்கு உழவர் சந்தை நிர்வாக அலுவலர் மணிவேல்முருகன் பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும்,அவர் மீது காவல் நிலையத்தில் எஃப் ஐ ஆர் வழக்கு பதிவு செய்ய வேண்டும்,அனைத்து விவசாயிகள் முன்னிலையில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை விவசாய அமைப்புகள் முன் வைத்தனர்.

வேளாண் துறை அதிகாரிகள், காவல்துறையினர் இது தொடர்பாக இன்று மாலை வரை அவகாசம் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டதை தொடர்ந்து விவசாயிகள்  அவர் மீது மேற்கண்ட நடவடிக்கை எடுக்கவில்லை எனில் எங்களது விவசாயிகள் போராட்டம் தீவிர படுத்தப்படும் என தெரிவித்தனர். முன்னதாக இன்று வழக்கம் போல தெற்கு உழவர் சந்தைக்கு வருகை தந்த விவசாயிகள் காய்கறிகள் விற்பதற்காக வழக்கம் போல தராசுவை பெற்றுச் செல்லாமல் இந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்தி பின்னர் காய்கறிகளை விற்க எடைபோடும் தராசுவை பெற்றுக் கொள்வதாக கூறி 700 - மேற்பட்ட விவசாயிகள் 80 -க்கும மேற்பட்ட தராசுகள் வாங்காமல் மறுப்பு தெரிவித்ததால் தெற்கு உழவர் சந்தை வளாகத்தில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

Tags:    

Similar News