குமரி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் போராட்டம்

குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

Update: 2024-06-27 12:02 GMT
விவசாயிகள் போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பொதுப்பணித்துறை, வேளாண் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த தோவாளை பகுதியை சேர்ந்த விவசாயிகள் நெற்ற்பயிர்களை கையில் கொண்டு வந்திருந்தனர். கூட்டம் தொடங்கியதும் அவர்கள் தோவாளை கால்வாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்து தண்ணீர் திறந்து விட மறுத்த பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்தும்,  மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  இதை தொடர்ந்து விவசாயிகள் கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறி விட்டு வெளிநடப்பு செய்தனர். இதை தொடர்ந்து கூட்ட அரங்கின்  வெளியே சென்று விவசாயிகள் தரையில்  அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Tags:    

Similar News