பிளாஸ்டிக் கழிவுகள் அப்புறப்படுத்த விவசாயிகள் கோரிக்கை!
காவிரி வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகள் அப்புறப்படுத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Update: 2024-06-02 14:20 GMT
அறந்தாங்கி அருகே நாகுடி பகுதியில் காவிரி கிளை வாய்க்கால் உள்ளது. சமீபத்தில் துார்வாரப்பட்ட இந்த வாய்க்கால் பகுதியில் அதிக அளவில் பாலித்தின் பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் கிடக்கின்றன. அதேபோல் அருகில் உள்ள மகளிர் விடுதி பகுதியிலும் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி கிடக்கின்றன. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படு கிறது. கிளை வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டால் பாலித்தின் பைகள் தண்ணீருடன் அடித்து வரப்பட்டு விவசாய நிலங்களில் தேங்கி மண்வளம் பாதிக்கப் படும் அபாயம் உள்ளது.
மேலும், இந்த தண்ணீரை பருகும் கால்நடைகளும் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளதால் துப்புரவு பணியாளர்களை கொண்டு பாலீத்தீன் பைகள், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.