முக்கொம்பு மேலணை காவிரி ஆற்றுக்குள் இறங்கி விவசாயிகள் போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி முக்கொம்பு மேலணை காவிரி ஆற்றுக்குள் விவசாயிகள் இறங்கி போராட்டம் நடத்தினர்.
Update: 2024-05-29 12:22 GMT
விவசாயிகள் டெல்லி சென்று போராட்ட நடத்த விடாமலும், உத்திர பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட கூடாது என்று ரயில் பயணம் செய்ய கூடாது என்பதற்காக உறுதியான ரயில்வே பயணசீட்டை ரத்து செய்வது, செல்ல விடாமல் காவல்துறையை வைத்து கைது செய்வதும், 2000கிலோமீட்டர் தொலைவில் இருந்து பிரதமர் மோடி வாரணாசி வந்து போட்டியிடலாம், 2000கிலோமீட்டர் தொலைவில் இருந்து ராகுல்காந்தி கேரளாவில் வந்து போட்டியிடலாம் ஆனால், தமிழக விவசாயிகள் வாரணாசி சென்று போட்டியிட்டால் விளம்பரதிற்காக என்று உச்ச நீதிமன்றம் கூறுவது எந்த வகையில் நியாயம் என்று வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சி முகொம்பு மேலணை காவிரி ஆற்றுக்குள் இறங்கி கோஷங்கள் முழங்க போராட்டம் நடத்தினர்.. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.