மேட்டூரில் விவசாயிகள் சாலை மறியல்
கரும்புகளை கொள்முதல் செய்யுமாறு வலியுறுத்தி மேட்டூர் விவசாயிகள் சாலை மறியல் செய்தனர்.
மேட்டூர் அருகே கோல் நாயக்கன்பட்டியி கிராமத்தில் சுமாா் 100 ஏக்கரில் செங்கரும்புகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. தமிழக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் செங்கரும்புகள் ,அரிசி, குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்படும் என அறிவித்தது. இதனை அடுத்துக் கடந்த மூன்று நாட்களாக அறுவடை செய்யப்பட்ட கரும்புகள் லாரிகள் ஏற்றி அனுப்பும் நடைபெற்று வந்தது.
இதனிடையே அரசு ஊழியர்கள், வரி செலுத்தும் நபர்களுக்கு பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்கப்படாது என அரசு அறிவித்துள்ளது. இதனால் கரும்பு கொள்முதல் செய்யும் அதிகாரிகள் கோல் நாயக்கன்பட்டியில் குறைந்த அளவு கரும்பு மட்டுமே கொள்முதல் செய்தனர். இதனால் லாரியில் ஏற்றப்பட்ட கரும்புகள் சாலையில் நிறுத்தப்பட்டது. இதனை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல் செய்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த அரசு அதிகாரிகள் கரும்பு கொள்முதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர் இதனால் சாலை மறியல் கைவிடப்பட்டது.