மின்தடையால் விவசாயிகள் அவதி

ராணிப்பேட்டை சுற்று வட்டார பகுதிகளில் இருமுனை மின்சாரம் வழங்குவதால் விவசாயிகள் மோட்டார் பம்ப்செட்டுகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Update: 2024-04-21 04:07 GMT

பைல் படம் 

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தை சுற்றியுள்ள சிறுவளையம், பெருவளையம், மேலப்புலம் புதூர், நெடும்புலி, ஜாகீர்தண்டலம், கீழ் வெண்பாக்கம், பொய்கைநல்லூர், ரெட்டிவலம், அகவலம், உளியநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் சொர்ணவாரி பருவ நடவு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் நடவு செய்யப்பட்ட பயிர்களுக்கு நீர்பாய்ச்சுவது மிகவும் அத்தியாவசிய தேவையாக உள்ளது.

ஆனால் விவசாயத்திற்கு தேவையான மும்முனை மின்சாரம் வழங்குவதில் மின்துறையினர் எந்தவித காலநேர அட்டவணையும் பயன்படுத்தாமல் மெத்தனமாக இருந்து வருகின்றனர். மேலும் எந்தவித முன்அறிவிப்பு இல்லாமல் தொடர்ச்சியாக இருமுனை மின்சாரம் வழங்குவதால் விவசாயிகள் மோட்டார் பம்ப்செட்டுகளை இயக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'சொர்ணவாரி பருவ நடவு பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். நடவு செய்த பயிர்களுக்கு நீர்பாய்ச்ச முடியாத நிலை உள்ளது. மும்முனை மின்சார தடையால் பயிர்கள் கருகி வருகிறது. இதனால் உடனடியாக மின் துறையினர் சீரான மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

Tags:    

Similar News