போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம்

பாரதிபுரம் பகுதியில் 15 -ஆவது, ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை துவக்க வலியுறுத்தி, போக்குவரத்து கழக, ஊழியர் சங்கத்தினர், உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

Update: 2024-06-25 06:32 GMT

போக்குவரத்து கழக தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கத்தின் சார்பில் தருமபுரி பொதுமேலாளர் அலுவலகம் முன்பு, 24 மணிநேர உண்ணாவிரதப் போராட்டம் துவங்கியது.போக்குவரத்து கழகங்களின் வரவுக்கும், செலவுக்குமான பற்றாக்குறையை ஈடுசெய்ய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவேண்டும். 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே துவக்கவேண்டும். 2022 டிசம்பர் முதல் ஓய்வுபெற்ற தொழிலாளியின் , பிஎஃப், கிராஜீவிட்டி தொகைகளை உடனே வழங்கவேண்டும்.

போக்குவரத்து ஓய்வூதியருக்கு 2015 முதல் நிறுத்தப் பட்டுள்ள 103 மாத டிஏ உயர்வை வழங்கவேண்டும்.அனைத்து பிரிவுகளிலும் உள்ள காலிப்பணியிடங்களை உடனே நிரப்பவேண்டும்.காண்ட்ராக்ட் முறையை கைவிடவேண்டும்.சமூகநீதியை நிலைநாட்டவேண்டும்.வாரிசு வேலை உடனே வழங்கவேண்டும்.புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தவேண்டும்.

உண்ணாவிரதப் போராட்டத்துக்கு மண்டல தலைவர் சி.முரளி தலைமைவகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் பி.ஜீவா துவக்கிவைத்து பேசினார். சிஐடியு மாநிலசெயலாளர் சி.நாகராசன் சிறப்புறையாற்றினார். மண்டல பொதுச்செயலாளர் எஸ்.சண்முகம் ,மண்டல செயல் தலைவர் சி.ரகுபதி ,மண்டல துணைத்தலைவர் வி.மணோன்மணி, ஆகியோர் ஆகியோர் கோரிக்கைகளை வாழ்த்திபேசினர்.

Tags:    

Similar News