இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவை சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்

இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவை சார்பில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

Update: 2024-02-03 13:02 GMT

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்

புதுக்கோட்டை வரலாற்று சிறப்புமிக்க காந்தி பூங்காவை தனியாரிடம் தாரை புதுக்கோட்டை நகரப் பகுதியில் நூறாண்டு காலம் பழைமை வாய்ந்த காந்தி பூங்கா உள்ளது . இந்த காந்தி பூங்காவில் அதிகாலை 4 மணிக்கு அரசு அதிகாரிகள், ஓய்வு பெற்றவர்கள், அங்கு வந்து நாளிதழ்கள் படிப்பதும் அங்குள்ள ரேடியோவில் காலை செய்திகளை கேட்பதும் ,மேலும் அங்குள்ள மணிக்கூண்டில் ஒரு மணிக்கு ஒரு தடவை எத்தனை மணி என்பதை குறிக்கும் வகையில் சத்தம் எழுப்பும் இது புதுக்கோட்டை நகர் மக்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தது.

இந்நிலையில் திமுக அரசு பதவி ஏற்றது முதல் அந்த பூங்காவை தனியார் வசம் ஒப்படைத்தது. அங்கே அந்த பூங்காவில் பொழுதுபோக்கு என்ற பெயரில் பல்வேறு கலாச்சார சீரழிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவியர் காலையிலிருந்து அங்கு வந்து குடித்துவிட்டு கும்மாளம் முடிப்பதும் கஞ்சா உள்ளிட்ட பல்வேறு வகையான போதை வஸ்துகள் உபயோகப்படுத்தப்படுகிறது‌.

மேலும் பகல் நேரத்திலேயே விபச்சாரங்களும் நடைபெறுகிறது. இதற்கு பக்கபலமாக விடியா திமுக அரசும் காவல் துறையும் அந்த தனியார் நிறுவனத்திற்கு பாதுகாப்பு அளிக்கின்றது. ஆகவே சமூக சீர்காட்டில் இருந்து பொதுமக்களை காக்கும் வண்ணவும் கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவியர் நல்வழிப்படுத்த காக்கும் வண்ணம் அகில இந்திய மகாத்மா சமூக நல பேரவை காந்திபூங்கா மீட்டெடுப்பு குழு சார்பில் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்து அந்த பூங்காவை மீண்டும் நகராட்சி வசம் கொண்டு வந்து முன்பு போல் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் ஆக்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டது.

மேலும் தமிழக அரசிற்கும் இது குறித்து பலமுறை புகார் மனு அளிக்கப்பட்டது ஆனால் விடியா திமுக அரசு இதனை கண்டு கொள்ளவில்லை மேலும் நாட்கள் நாளுக்கு நாள் அங்கு பல்வேறு வகையான குற்றச்சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன அங்கு மாலை நேரத்தில் செல்லும் குடும்பத்தினரை அங்கு போதையில் இருப்பவர்கள் பிரச்சனை செய்வதும் வம்பு இழுப்பதும் தொடர்கதையாக உள்ளன. இதனை கண்டித்து அகில இந்திய மகாத்மா சமூக நலப்பேரவை மற்றும் காந்தி பூங்கா மீட்பு குழு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இது குறித்து அகில இந்திய மகாத்மா சமூக நலப் பேரவை நிறுவனர் தினகரன் தெரிவிக்கையில் தற்பொழுது இதனை தனியாருக்கு குத்தகைக்கு விட்டதால் அங்கு பல்வேறு வகையான போதைக்கு அடிமையாகி கல்லூரியில் படிப்பவர்கள் சீர் கட்டு உள்ளனர் மேலும் இந்த இடம் மிகப்பெரிய விபச்சார கூட்டமாக மாறி வருகிறது இதற்கு விடியா திமுக அரசும் வீடியோ திமுக அரசின் ஏவல் துறையான காவல் துறை தகுந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்கிறது.

இன்று கூட நாங்கள் இந்த உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கும் சாமியான பந்தல் போடுபவர்களையும் மைக் செட் அமைப்பவர்களும் மிரட்டி இங்கிருந்து அனுப்பிவிட்டனர் எங்கள் போராட்டத்தை பல வகையில் ஆளும் திமுக அரசு விடியா தடுத்து வருகிறது.

ஆகவே உடனடியாக இதில் அரசு சிறப்புக்கு கவனம் செலுத்தி தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டது ரத்து செய்து மீண்டும் நகராட்சி வசம் ஒப்படைத்து பொதுமக்கள் பொழுதுபோக்கு இடமாக மாற்றாவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும் என தெரிவித்தார் இந்த போராட்டத்தில் காந்திய பேரவை செயலாளர் மோகன்ராஜ் நிஷா மாரிமுத்து எஸ்டிபிஐ கட்சியின் சலாவுதீன் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News