ராமநாதபுரம் வருவாய் அலுவலர் சங்கத்தின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்
ராமநாதபுரம் தமிழ்நாடு வருவாய் சங்கத் தலைவர் பழனி குமார் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.;
By : King 24x7 Angel
Update: 2024-02-13 06:33 GMT
உண்ணாவிரதப் போராட்டம்
ராமநாதபுரம் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலகங்கள் சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டம் 3/2/24 அன்று பெரம்பலூரில் நடைபெற்றது தீர்மானிக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில்அடிப்படையில் வருவாய்த்துறை பத்து அம்ச வாழ்வாதார கோரிக்கை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்ற கோரி அன்று மாவட்ட தலைநகரில் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறும். அதன் அடிப்படையில் இன்று ராமநாதபுரம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் ராமநாதபுரம் தமிழ்நாடு வருவாய்த்துறை சங்கங்களின் தலைவர் பழனிக்குமார் தலைமையில் உறுப்பினர்கள் அனைவரும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துள்ளனர்.