கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி தந்தை,மகன் உயிரிழப்பு

லால்குடி அருகே தண்டாங்கரை கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய அண்ணன் மகனை காப்பாற்ற சென்ற அவரது சித்தப்பாவும் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.;

Update: 2024-05-08 03:30 GMT

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தண்டாங்கோரை கிராமம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ரத்தினம். இவரது மகன்கள் தங்கவேல் (32), மோகன் (29). இவர்கள் வசிக்கும் கிராமத்திற்கு அருகே கொள்ளிடம் ஆறு உள்ளது. இந்த ஆற்றில் தொடர்ந்து அரசு மணல் குவாரி செயல்பட்டு வந்ததால் கொள்ளிடம் ஆற்றில் பல்வேறு இடங்களில் ஆழம் நிறைந்த பள்ளங்களில் நீர் தேங்கியுள்ளது.

இந்நிலையில் நேற்று மாலை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தங்கவேல் மகன் 8 வயதான ரிதன் தனது சித்தப்பா மோகனை அழைத்துக் கொண்டு தண்டாங்கோரை கிராமத்துக்கு அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றனர்.அப்போது ஆற்றின் ஆழமான பகுதியில் சென்ற ரிதன் தண்ணீரில் மூழ்கியதை பார்த்த சித்தப்பா மோகன் பதற்றமடைந்து தனது அண்ணன் மகனை காப்பாற்ற முயன்ற போது மோகனும், தண்ணீரில் மூழ்கி மாயமானார்.

Advertisement

இச்சம்பவம் குறித்து லால்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.தகவலறிந்த லால்குடி தீயணைப்பு படையினர் ஆற்றில் மூழ்கி மாயமான மோகன் மற்றும் ரிதன் ஆகிய இருவரையும் சடலமாக மீட்டு லால்குடி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.லால்குடி போலீசார் பிரேத பரிசோதனைக்காக இருவரது உடல்களையும் லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இந்த சம்பவம் குறித்து லால்குடி போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News