பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய தந்தை

குமரி அருகே பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய வளர்ப்பு தந்தை, போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-12-29 11:31 GMT
பைல் படம்

கன்னியாகுமரி மாவட்டம் மஞ்சாலுமூடு பகுதியை சேர்ந்த 36 வயது பெண் முந்திரி தொழிற்சாலையில்  வேலை பார்க்கிறார். அவருக்கு திருமணம் ஆகி 17 வயதில் பிளஸ் 2 படிக்கும்  மகள் உள்ளார்.  மகள் பிறந்த சில மாதத்தில் கணவரை பிரிந்து  தாயும்  மகளும் தனியாக வாசித்து வந்தனர். அதே பகுதியை சேர்ந்தவர் ராபர்ட் (35). ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி  அந்தப் பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு தற்போது பத்து வயதில் மகன் உள்ளார்.      

Advertisement

இந்நிலையில் 17 வயது சிறுமி மீது ராபர்ட் க்கு ஆசை வந்துள்ளது. சம்பவத்தன்று  நள்ளிரவில்  ராபர்ட் சிறுமியை பாலியல் சீண்டல் செய்து, பாலியல் வன்முறை செய்துள்ளார். அதன் பின்னர் அடிக்கடி சிறுமியை மிரட்டி வன்புணர்வு செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. தாயார் அங்குள்ள ஒரு அரசு ஆஸ்பத்திரிக்கு  அழைத்துச் சென்றார். அங்கு டாக்டர்கள்  பரிசோதித்தபோது சிறுமியின் வயிற்றில் 5 1/2 மாத குழந்தை இருந்ததை கண்டு பிடித்தனர்.      

கர்ப்பத்திற்கான காரணம் கேட்டபோது அந்த சிறுமி நடந்தவற்றை கூறியுள்ளார். இதை அடுத்து சிறுமியின் தாயார் மார்த்தாண்டம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் ராபர்ட்டை கைது செய்து, அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, தொடர் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News