Fatia சார்பாக மனு
FATIA தலைவர் V.K.ராஜமாணிக்கம் அவர்கள் வணிகவரி தொடர்பான கோரிக்கை மனுவை வணிகவரி இணை ஆணையரிடம் வழங்கினார்.;
ஈரோடு மாவட்டத்தில் 75க்கும் மேற்பட்ட பல்வேறு தொழில் வணிக சங்கங்களின் கூட்டு அமைப்பான ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு (FATIA) சார்பாக கீழ்க்காணும் கோரிக்கைகளை தங்களது பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம். மத்திய அரசு அறிவித்திருந்த வாடகையின் மீதான GST-ல் ரூ.1.50 கோடிக்கு கீழ் வணிகம் புரியவர்களுக்கு இந்த GST வரிவிதிப்பை நிறுத்தி வைத்திருப்பதை வரவேற்று FATIA சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். குடும்ப நபர்களில் ஒருவரது பெயரில் கட்டிடமும், மற்றொருவரது பெயரில் தொழிலும் இருந்தால் அவர்களும் வாடகை செலுத்தவில்லை என்றாலும் உத்தேச வாடகை கணக்கிட்டு GST செலுத்த வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. மகன் தந்தைக்கும், கணவன் மனைவிக்கும் உத்தேச வாடகை நிர்ணயம் செய்து GST வரி செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது, கூட்டுக் குரும்ப வாழ்க்கையில் ஒன்றாக உழைத்து இந்திய தொழில் வளர்ச்சிக்கு உதவியாக உள்ள அனைத்து பொதுமக்களையும் பாதிக்கும் வண்ணம் உள்ளது. எனவே, குரும்ப உறுப்பினர்களுக்கு உத்தேச GST வரி விலக்கு அளிக்க வேண்டும் என FATIA சார்பாக கேட்டுக் கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுவணிகவரித்துறை மூலமாக வணிகர்களுக்கு கடிதங்கள் மற்றும் நோட்டீஸ்களை மின்னஞ்சல் வழியாக அனுப்பும்போது அது அவர்களுடைய ஆடிட்டர்களுக்குசெல்கிறது. அதிகபட்ச மின்னஞ்சல் செய்திகளால் அது கவனிக்கப்படாமல் உரிய தபர்களுக்கு இத்தகைய நோட்டீஸ் வந்த விபரமே தெரியாமல் போகிறது. இதன் காரணமாக பல வணிகர்களின் மேல் வணிகவரித்துறை சார்பாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்தகைய குழப்பங்களை தவிர்க்க மின்னஞ்சல் மூலமாக கடிதங்களை அனுப்பாமல் உரிய நபர்களுக்கு கடிதமாக தபால் மூலம் அளிக்க ஆவண செய்ய கேட்டுக் கொள்கிறோம். 01.07.2017 முதல் 30.10.2017 வரை நூலிற்கான GST 18% ஆக இருந்தது. 01.11.2017 முதல் தற்சமயம் வரை நூலிற்கான GST 12% ஆக இருந்து வருகிறது. இந்த இரு கால கட்டத்திலுமே துணியின் GST 5% ஆக உள்ளது. எனவே இந்த இரு காலத்திலுமே Accumalated Credit ஆன 13% & 7% ஐ விசைத்தறி உரிமையாளர்களுக்கு திரும்பர் பெற்றுத் தருமாறு மத்திய, மாநில அரசினை கேட்டுக் கொள்கிறோம். மேலும் Input Tax திரும்பப் பெற விசைத்தறியாளர்களுக்கு உள்ள பிரச்சனைகளை தவிர்க்க நூலுக்கும் துணிக்கும் ஒரே GST ஆக இருக்குமாறு மாற்ற வேண்டுமென FATIA சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.