வர்ணம் இல்லாத வேகத்தடை: வையாவூரில் விபத்து அச்சம்

வேகத்தடைகள் மீது, வாகன ஓட்டிகளுக்கு எளிதாக தெரியும் அளவிற்கு வெள்ளை நிற கோடுகள் வரையவில்லை என வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டியுள்ளனர்.;

Update: 2024-05-20 11:14 GMT

வர்ணம் பூசாத வேகத்தடை

காஞ்சிபுரம் அடுத்த முத்தியால்பேட்டை கிராமத்தில் இருந்து நத்தப்பேட்டை, களியனுார், வையாவூர், கரூர் ஆகிய கிராமங்களின் வழியாக, ராஜகுளம் வரை, புறவழிச்சாலை உள்ளது. இந்த கிராமங்களின் முக்கிய சந்திப்பு பகுதிகளில்,

வேகத்தடை அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று, காஞ்சிபுரம் நெடுஞ்சாலை துறையினர் நத்தப்பேட்டை பிரதான வளைவில், கடந்த ஜனவரி மாதம் வேகத்தடை அமைத்தனர். அதன் மீது கண்துடைப்பிற்கு, வெள்ளை அடிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, காஞ்சிபுரம் அடுத்த வையாவூர் கிராமத்தில், சமீபத்தில் மூன்று சந்திப்பு சாலைகளில், வேகத்தடை அமைத்தனர். 

 இந்த வேகத்தடைகள் மீது, வாகன ஓட்டிகளுக்கு எளிதாக தெரியும் அளவிற்கு வெள்ளை நிற கோடுகள் வரையவில்லை. இதனால், வேகத்தடை இருப்பது தெரியாமல், திடீரென பிரேக் பிடிப்பதால், விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது.

Tags:    

Similar News