ஆட்டோவில் இரவில் மண்ணெண்ணெய் கடத்திய பெண் டிரைவர்

கொல்லங்கோட்டில் ஆட்டோவில் இரவில் மண்ணெண்ணெய் 245 லிட்டர் கடத்திய பெண் ஓட்டுனரை போலீசார் பறிமுதல் செய்தனர்.;

Update: 2024-02-03 16:13 GMT
பறிமுதல் செய்யப்பட்ட மண்ணெண்ணெய்

குமரி மாவட்டம் கொல்லங்கோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் தாமஸ், ஏட்டு கணேஷ் குமார் ஆகியோர் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருமண்ணம் சந்திப்பு பகுதியில் கேரள பதிவு எண் கொண்ட ஒரு பயணிகள் ஆட்டோவந்துள்ளது.

உடனே போலீசார் அதை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஒரு பெண் ஆட்டோவை ஓட்டி வந்தது தெரிய வந்தது.       அதே வேளையில் ஆட்டோவில் இருந்து மண்ணெண்ணெய் வாசனை அதிகமாக வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் ஆட்டோவை சோதனையிட்டனர்.    

Advertisement

  அப்போது ஃபைபர் படகுக்கு மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 7கேன்களில் மொத்தம் 245 லிட்டர்  இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.      

இரவு வேளையானதால் போலீசார் பெண் ஆட்டோ டிரைவரை ஆட்டோவில் இருந்து கீழே இறக்கி எச்சரித்து அனுப்பினார். பின்னர் மற்றொரு ஆட்டோ வரவழைத்து அந்த பெண்ணை அனுப்பி வைத்தனர்.        தொடர்ந்து ஆட்டோ மற்றும்  மண்ணெண்ணெய் ஆகியவற்றை பறிமுதல் செய்து கிள்ளியூர் வட்ட வழங்கல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News