மின்சார ரயிலில் அடிபட்டு பெண் மயில் பலி

மின்சார ரயிலில் அடிபட்டு பெண் மயில் பலியானது.

Update: 2024-06-28 14:54 GMT

பெண் மயில்

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் மூன்றாவது பிளாட்பாரத்திற்கு கும்மிடிப்பூண்டி முதல் சென்னை கடற்கரை வரை செல்லும் மின்சார ரயில் வந்தது.

அப்போது பறந்து வந்த பெண் மயில் ஒன்று ரயிலில் அடிபட்டு கீழே பிளாட்பாரத்தில் அருகே விழுந்தது இது குறித்து தகவல் அறிந்த மீஞ்சூர் வருவாய் ஆய்வாளர் புருஷோத்தமன் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போது பெண் மயில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வனத்துறை தகவல் தெரிவிக்கப்பட்டு அவரிடம் பெண் மயிலை ஒப்படைத்தார்.

Tags:    

Similar News