குடும்ப தகராறில் பெண் தற்கொலை
வாக்களிக்க தனியாக சென்றதால் கணவன் கண்டித்த மன உளைச்சலில் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாரண்டஅள்ளி அடுத்த உலகனஅள்ளி பகுதி சேர்ந்தவர் சின்னசாமி இவருக்கு புனிதவள்ளி என்ற மனைவி உள்ளார். இவர் கடந்த நாடாளுமன்ற தேர்தல் அன்று தனியாக சென்று வாக்குப்பதிவு செலுத்தி வந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மனவிரத்தில் இருந்த புனிதவள்ளி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதனை அறிந்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்க அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்து நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். இது குறித்து மாரண்டஅள்ளி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.