கன்னியாகுமரியில் 19-ம் தேதி படகு சேவை ரத்து

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 19ம் தேதி கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபம் செல்லும் படகு சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-04-16 12:32 GMT

படகு பயணம் ரத்து

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது.  இவற்றைப் பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது. இதற்காக பொதிகை, குகன் விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.

தினமும் காலை 8 மணி முதல்  மாலை 4 மணி வரை இடைவேளையின்றி தொடர்ச்சியாக படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையே கண்ணாடிக் கூண்டு இழையிலான இணைப்பு பாலம் அமைக்கும் பணி நடை பெற்று வருவதால் திருவள்ளுவர் சிலைக்கு கடந்த 10 மாதங்களுக்கு மேலாக படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.  இதனால் தற்போது விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு மட்டும் படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.       

இந்த நிலையில் வருவருகிற 19 -ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதை யொட்டி அன்றைய தினம் வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதற்கு வசதியாக பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு வருகிற 19- ந் தேதி படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்த தகவலை கன்னியா குமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags:    

Similar News