வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் குறித்து நீலகிரியில் கள ஆய்வு

Update: 2023-12-16 10:42 GMT

கள ஆய்வு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, நீலகிரி மாவட்டத்தில் 27.10.2023 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 27.10.2023 முதல் 09.12.2023 வரை புதிய வாக்காளர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திடவும், முகவரி மாற்றம், புகைப்பட மாற்றம் செய்வது தொடர்பாக சிறப்பு சுருக்க முறை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெற்றது. இந்த வாக்காளர் பட்டியல் திருத்த காலத்தில் (04.11.2023) (சனிக்கிழமை), 05.11.2023 (ஞாயிற்றுகிழமை), 25.11.2023 (சனிக்கிழமை) மற்றும் 26.11.2023 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நான்கு நாட்கள் அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்தில் 27.10.2023 முதல் 09.12.2023 வரை நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் - 2024-ன் கீழ் பெறப்பட்ட சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பாக பெறப்பட்ட மனுக்களில் உதகை , கோத்தகிரி, குன்னூர் ஆகிய பகுதிகளில் விண்ணப்பம் செய்தவர்களிடம் நீலகிரி மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அரசு சிறப்பு செயலாளர் சங்கர் அவர்கள் நேரில் கள ஆய்வு மேற்கொண்டார்.
Tags:    

Similar News