கந்தர்வகோட்டை அரசு வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு களப்பயிற்சி
கந்தர்வகோட்டை அரசு வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு களப்பயிற்சி அளிக்கப்பட்டது.
கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், புதுப்பட்டி ஊராட்சியில் அரசு வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாய களப்பயிற்சியில் ஈடுபட்டனர். புதுப்பட்டி ஊராட்சியில் கந்தர்வகோட்டை வேளாண்மை வட்டாரத்தை தலைமையிடமாகக் கொண்டு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் குடுமியான்மலை வேளாண் கல்லூரி மாணவிகள்,
கந்தர்வகோட்டை மற்றும்அதன் சுற்றுவட்டார பகுதியில் விவசாயிகளை சந்தித்து விவசாய அனுபவங்களை நேரில் கேட்டறிந்து கல்வி பயின்ற அனுபவங்களை விவசாயிகளுக்கு எடுத்துக் கூறியும் அனுபவங்களை பரிமாறி கொள்கிறார்கள். மேலும், கந்தர்வகோட்டை வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு நேரில் சென்று சுற்றுவட்டார கிராமப்புற முன்னோடி விவசாயிகளின் அனுபவங்களை கேட்டறிந்து வருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக, புதுப்பட்டி கிராமத்தில் இயற்கை முறை விவசாயிகளை சந்தித்து வயல் வரப்பிற்கு சென்று இயற்கை முறையில் நெல் சாகுபடி செய்யும் தொழில்நுட்பங்களை குறித்து கேட்டறிந்தனர்.
ஆடுதுறை-37 என்ற நெல் நாற்றுகளை உயிரி உரமான அசோஸ்பைரில்லம் கொண்டு நாற்றுநேர்த்தி செய்முறை விளக்கத்தை மாணவிகளுக்குவிவசாயிகள் கற்றுக் கொடுத்தனர். இதில், அருள் ஜோதி, ஹேமா ஸ்ரீ, கார்த்திஸ்வரி, சௌமியா, ஸ்ரீவர்ஷினி, செய்யதுமதுதாள், மற்றும் தேன்மொழி ஆகிய மாணவிகள் களப்பயிற்சி பெற்று வருகின்றனர்.