துவங்கியது வேட்புமனு தாக்கல் !

சேலத்தில் வேட்புமனு தாக்கல் துவங்கியநிலையில் கலெக்டர் அலுவலகத்தில் துணை ராணுவத்தினர் மற்றும் போலீசாரின் பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Update: 2024-03-21 03:47 GMT

சேலத்தில் வேட்புமனு தாக்கல் துவங்கியநிலையில் கலெக்டர் அலுவலகத்தில் துணை ராணுவத்தினர் மற்றும் போலீசாரின் பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

வேட்பு மனு தாக்கல் தொடங்கியதையொட்டி கலெக்டர் அலுவலகத்தில் துணை ராணுவத்தினர் மற்றும் போலீசாரின் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. அவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தவர்களை பலத்த சோதனைக்கு பிறகே அனுமதித்தனர். மேலும் கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களும் பலத்த சோதனைக்கு பிறகே அனுமதித்தனர்.

அரசியல் கட்சிக்கொடியுடன் வந்த கார்களை நிறுத்தி, கட்சிக்கொடியை அகற்றும் படி அறிவுறுத்தினர். அதன்படி அவர்கள் கட்சிக்கொடியை அகற்றிய பிறகே கார்களை அனுமதித்தனர். கலெக்டர் அலுவலகம் முழுவதும் ராணுவ பாதுகாப்பு போடப்பட்டு இருந்தன. அதே போன்று சேலம் சூரமங்கலத்தில் உள்ள சேலம் மேற்கு தாசில்தார் அலுவலகத்திலும் துணை ராணுவத்தினர், போலீசாரின் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளன. வேட்பு மனு தாக்கல் செய்ய 27-ந்தேதி கடைசி நாள் ஆகும்

. நேற்று முதல் நாளில் சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட, சேலம் அம்மாபேட்டையை பகுதியை சேர்ந்தவர் அகமது ஷாஜகான். 54 வயதான இவர் பிஸ்மில்லா மக்கள் கட்சி சார்பில் போட்டியிட தேர்தல் நடத்தும் அலுவலர் பிருந்தாதேவியிடம் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். வக்கீலான இவர் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் பல முறை போட்டியிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News