பரமத்தி வேலூரில் சினிமா படப்பிடிப்பு
பரமத்தி வேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறு மாரியம்மன் கோவிலில் சினிமா படப்பிடிப்பு நடைபெறுவதை பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து பார்த்து ரசித்து சென்றனர்.
நாமக்கல் மாவட்டம் வேலூர் தாலுக்கா நன்செய் இடையார் மகா மாரியம்மன் கோயிலில் சினிமா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. ஆனந்த லட்சுமி பிலிம்ஸ் என்று தயாரிப்பு நிறுவனம் அறிமுக இயக்குனர் பாண்டியராஜன் மற்றும் அறிமுக நாயகன் நாயகிகளை கொண்டு சினமுறு என்ற படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. படத்தினை நன்செய் இடையாறு தலைவர் செந்தில் துவக்கி வைத்தார். மேலும் படப்பிடிப்பானது நன்செய் இடையார் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
படப்பிடிப்பில் துனை நடிகர்கள் நடிகைகள் தயாரிப்பாளர் மாரீஸ்வரன், மற்றும் இணை தயாரிப்பாளர்கள் ஸ்டீபன் மரியதாஸ், விஜயபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். நன்செய் இடையார் பகுதியில் சினிமா படப்பிடிப்பு நடைபெறுவதை அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து பார்த்து ரசித்து செல்கின்றனர்.