வாணியம்பாடி அருகே காவலரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி

வாணியம்பாடி அருகே உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு 28 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது.

Update: 2024-02-10 13:06 GMT

காவலர் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கல் 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கஸ்பா -ஏ பகுதியை சேர்ந்தவர் முரளி இவர், கடந்த 20 ஆண்டுகளாக ஆம்பூர், உமராபாத், காவல்நிலையங்களில் பணியாற்றி வந்த நிலையில், வாணியம்பாடி கிராமிய காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்த போது கடந்த 11.11.2023 அன்று வாணியம்பாடியில் நடைப்பெற்ற பேருந்து விபத்தில், படுகாயமடைந்தவர்களை மீட்டு தலைமை காவலர் முரளி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்தார்,

அப்பொழுது காவலர் முரளியிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, மருத்துவமனையிலேயே உயிரிழந்தார், இதனை தொடர்ந்து அவரின் உடல் அவரது சொந்த ஊரான ஆம்பூர் கஸ்பா -ஏ பகுதியில் உள்ள மயானத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது..

இதனை தொடர்ந்து தலைமை காவலர் முரளியிற்கு திருமணம் ஆகி ஒரு பெண் ஒரு ஆண் பிள்ளைகள் உள்ள நிலையில், அவரது குடும்பத்தினருக்கு உதவும் நோக்கில் , தலைமை காவலர் முரளியுடன் சேர்ந்து 2003 ஆம் ஆண்டில் பயிற்சி முடித்த காவலர்கள், மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள காவலர் உதவும் கரங்கள் சார்பில் முரளியின் குடும்பத்தினருக்கு 28 லட்சத்து 78 ஆயிரம் ரூபாயை வழங்கினர்..

Tags:    

Similar News