நிதி நிறுவனத்தில் கடன் பெற்று தருவதில் மோசடி - காவல் நிலையத்தில் குவிந்த பெண்கள்

நிதி நிறுவனத்தில் கடன் பெற்று தருவதில் மோசடி செய்ததால் காவல் நிலையத்தில் குவிந்த பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-03-04 10:15 GMT
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்னான்டாங் கோவில் பதியைச் சேர்ந்த ஜெயகணேஷ் மனைவி கீர்த்தனா, ஆண்டாங் கோவில் கிழக்கு, செல்வநகர் பகுதியை சேர்ந்த இளங்கோ மனைவி ராஜு, கரூர் வையாபுரி நகர் 2வது கிராஸ் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி மனைவி மணிமேகலை ஆகியோர் அந்த பகுதியில் வசிக்கும் பெண்களிடம் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று தருவதாக கூறி, அவர்கள் பெயரில் கடன் வாங்கி அதில் பாதி பணத்தை இவர்கள் திரும்ப பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், வாங்கிய கடனில் பாதி கடனை அவர்கள் நிறுவனத்திற்கு செலுத்தியுள்ள நிலையில், மீதி கடனையும் செலுத்த கூறி நிதி நிறுவனத்தினர் வற்புறுத்தி உள்ளனர். வாங்கிய கடனில் பாதியை பெற்றுக் கொண்ட அந்த மூன்று பேரும் கடனை திருப்பி செலுத்தாமல் இருந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு, இது தொடர்பாக புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட மூன்று பெண்கள் மீதும் நடவடிக்கை எடுக்காமல் காலம் கடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் இன்று கரூர் மாநகர காவல் நிலையத்திற்கு வந்து உரிய விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், சம்பந்தப்பட்ட மூவரில் மணிமேகலை என்பவர் தற்போது தலைமறைவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது. அதே சமயம் சம்பந்தப்பட்ட நபர்களை அழைத்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர் காவல்துறையினர்.
Tags:    

Similar News