ரயில் மோதி நிதி நிறுவன மேலாளர் இறப்பு

நாகர்கோவிலில் ரயில் மோதியதில் நிதி நிறுவன மேலாளர் உயிரிழந்தார்.;

Update: 2024-01-23 09:28 GMT
பைல் படம்

கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு அருகே உள்ள ஆசாரி விளை பகுதியை சேர்ந்தவர் டெல்பின் கில்டஸ் (46).  இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் நிதி  நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி இரண்டு குழந்தைகளும் உண்டு.        இந்த நிலையில் டெலிபின் கில்டஸ் நேற்று காலை தனது வீட்டில் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் பணமாக கிடந்தார். அவரது உடலில் பலத்த காயங்கள் இருந்தன.

Advertisement

இதை பார்த்த அந்த பகுதி மக்கள் உடனே இது குறித்து நாகர்கோவில் ரயில்வே போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.         போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று டெல்பின் கில்டஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குமரி மாவட்ட  அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் டெல்பின் கில்டஸ் காலை நடை பயிற்சிக்கு சென்றதும், ரயில் தண்டவாளம் அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது ரயில் மோதி உயிரிழந்ததும் தெரிய வந்தது.        

இது குறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருக்கிறார்கள்.

Tags:    

Similar News