கீழடியில் பாசி, கண்ணாடி மணிகள் கண்டெடுப்பு

கீழடி 10ஆம்‌ கட்ட அகழாய்வில் பாசி, கண்ணாடி மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

Update: 2024-06-26 11:16 GMT

  கீழடி 10ஆம்‌ கட்ட அகழாய்வில் பாசி, கண்ணாடி மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் 10ஆம் கட்ட அகழாய்வில் கண்ணாடி மணிகள், பாசிகள் உள்ளிட்ட 27 பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர். கீழடியில் 10ம் கட்ட அகழாய்வை கடந்த 18ம் தேதி முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். கீழடியில் ஜவஹர், பிரபாகரன், கார்த்திக் ஆகியோரது ஒன்றரை ஏக்கர் நிலங்களில் 12 குழிகள் தோண்டப்பட்டு 10ஆம் கட்ட அகழாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

கடந்த 5 நாட்களில் இரண்டு குழிகள் மட்டும் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வந்தன. இரு குழிகளும் ஒன்றரை அடி ஆழம் வரை தோண்டப்பட்டுள்ள நிலையில் அகழாய்வில் பாசி மணிகள், கண்ணாடி மணிகள் உள்ளிட்ட 27 பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை இயக்குனர் சிவானந்தம் அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News