ஆட்சியர் அலுவலக மின்மாற்றியில் ஏற்பட்ட தீ விபத்து !
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் உள்ள மின்மாற்றியில் திடீரெனெ தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
By : King 24x7 Angel
Update: 2024-04-06 06:48 GMT
கோவை:கோடை வெயிலின் தாக்கத்தால் கோவை மாவட்டத்தில் 100 டிகிரிக்கும் மேல் வெப்பம் பதிவாகி வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் இ-சேவை மையம் எதிரே உள்ள மின்மாற்றியில் திடீரென தீ பிடித்து எரிந்தது.அருகில் இருந்த சருகுகளிலும் தீ பரவி எரியத் துவங்கியது. இதனை கண்ட அலுவலக ஊழியர்கள் துணிகளை கொண்டும் தண்ணீர் ஊற்றியும் தீயை அணைத்தனர். இதையடுத்து மின்வாரிய அதிகாரிகளுக்கும் தகவல் அளிக்கப்பட்டு மின்மாற்றியில் சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இச்சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.