அரசு மருத்துவமனையில் மின்விபத்து

மாவட்ட தலைமை மருத்துவமனையில் பிரசவ பண்டுவ அறையில் மின்கசிவால் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்து

Update: 2023-12-08 01:00 GMT

அரசு மருத்துவமனையில் தீவிபத்து

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது .பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உள்நோயாளியாகவும் வெளி நோயாளியாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர் .இந்நிலையில் கடந்த 5 .12 .2023 ஆம் தேதி நள்ளிரவில் மின் கசிவின் காரணமாக பிரசவ பண்டுவ அறையில் தீப்பற்றி எரிந்துள்ளது .இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் அங்கிருந்து வேறொரு வார்டுக்கு மாற்றப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றனர். இந்த செய்தியை பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை நிர்வாகம் மூடி மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது என பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.

மேலும், கர்ப்பிணி தாய்மார்களின் பிரசவ பண்டுவ அறையில் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை நிர்வாகத்தினர் முறையாக மின் பராமரிப்பு மற்றும் மின் சாதனங்களை கையாளதன் காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளது என்றும் இது குறித்த செய்தியை மூடி மறைக்க முயற்சித்த பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை நிர்வாகத்தினர் உடைய செயலை பல்வேறு தரப்பினரும் கண்டித்து வருகின்றார் .மேலும், இது குறித்த புகைப்படங்கள் என்று சமூக வலைதளம் மூலம் பரவி வருகின்றது .பொது மக்களை காக்க வேண்டிய மருத்துவத்துறையினர் தீப்பற்றிய போதும் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்காமல் இந்த செய்தியை மூடி மறைத்தன் காரணம் குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்புகின்றனர். மேலும் இது குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் கேட்டபோது மின் கசுவின் காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது .அதனை அங்கிருந்த மருத்துவமனை பணியாளர்களே அனைத்து விட்டனர் .பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News