பழைய குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து

திருச்செங்கோடு பழைய குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் புகை சூழ்ந்து பொதுமக்கள் அவதியடைந்தனர்.

Update: 2024-04-29 07:23 GMT

தீ விபத்து 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கோழிக்கால் நத்தம் ரோடு அருகில் உள்ள பழைய மயானத்தில் பழைய பொருட்களை போட்டு வைக்கும் குப்பை கிடங்கு இருந்தது. திடீரென தீ பரவியதால் அங்கு கொட்டப்பட்டு இருந்த குப்பைகள் மல மல என எரிந்தது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீயின் வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அப்பகுதியில் புகைமூட்டம் அதிகமாக இருந்ததால் அப்பகுதி பொதுமக்கள் மூச்சு விட கூட சிரமப்பட்டதாக கூறினார்கள்.
Tags:    

Similar News