தைல மரக்காட்டில் தீ விபத்து
திருமயம் அருகே தைலமர காட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 2 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த தைல மரங்கள் எரிந்து சேதமானது.;
Update: 2024-03-08 05:52 GMT
எரிந்து கருகிய மரங்கள்
திருமயம் ஒன்றியம் கண்ணார் பகுதியில் ராங்கியம் பனையப்பட்டி சாலையோரம் வனத்தோட்ட கழகம் சார்பில் ஆயிரத்து 500 ஏக்கரில் தைலமரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந் நிலையில் தைல மரக்காட்டில் இடந்த காய்ந்த சருகுகளில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. திருமயம் தீயணைப்பு மீட்பு படையினர் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத் தனர். தீ விபத்தில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் இருந்த தைல மரங்கள் கருகி சேதமடைந்தன. வனப்பகுதியில் கால்நடைகளை மேய்த்தவர்கள் புகைபிடித்துவிட்டு நெருப்பை அணைக்காமல் வீசி சென்றதால் தீ விபத்து ஏற்பட்டது விசாரணையில் தெரியவந்தது.