சேலம் மாவட்டம் மேட்டூரில் குப்பை கிடங்கில் தீ விபத்து

மேட்டூர் அருகே பி.என்.பட்டியில் குப்பை கிடங்கில் தீ விபத்து.

Update: 2024-03-31 15:56 GMT

குப்பை கிடங்கில் தீ விபத்து

மேட்டூர் அருகே பி.என். பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொது மக்களிடம் தூய்மை பணியாளர்கள் மூலம் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. சேகரிக்கப்படும் குப்பைகளை ராமமூர்த்தி நகரில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம்  பிரிக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை இந்த குப்பை கிடக்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மள மள பரவி குப்பைக்கு கிடங்கு முழுவதும் பற்றி எரிய தொடங்கியது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. புகையின் காரணமாக ராமமூர்த்தி பகுதியில் வசிக்கும் பொது மக்கள் மூச்சடைப்பு உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர். தீ விபத்து குறித்து தீயணைப்பு நிலைய த்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இரண்டு வாகனங்களில் வந்த தீயணைப்பு படை வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அனைத்தனர்.
Tags:    

Similar News