பாம்பை மீட்ட தீயணைப்புத் துறையினர்
அண்ணா அரசு பூங்காவில் புகுந்த பாம்பை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.;
Update: 2024-04-27 06:08 GMT
அண்ணா அரசு பூங்காவில் புகுந்த பாம்பை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
ராயபுரம் பகுதியில் உள்ள அறிஞர் அண்ணா அரசு பூங்காவில் இன்று பிற்பகல் 6 அடி நீளமுள்ள பாம்பு பூங்கா உள்ளே புகுந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். உடனடியாக தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் மூன்று பேர் பாம்பு இருக்கும் இடத்தை நோட்டமிட்டு ஐந்தே நிமிடத்தில் பாம்பை பத்திரமாக மீட்டுச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.