ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீத்தெடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு

மயிலாடுதுறை அருகே காளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊர் மக்கள் முன்னிநிலையில் தீத்தடுப்பு ஒத்திகை மற்றும் விழிப்புணர்வு முகாம் தீயணைப்பு துறையினரால் நடத்தப்பட்டது

Update: 2024-05-20 06:17 GMT

தீத்தெடுப்பு ஒத்திகை

. மயிலாடுதுறை மாவட்டம் காளி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.சி.அஜித் பிரபு குமார் உத்தரவின் பேரில் மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு வல்லுநர் மற்றும் தர மருத்துவ அலுவலர் மரு.பிரவீன் காளி ஊராட்சி மன்ற தலைவர் உமாபதி, காளி வட்டார மருத்துவ அலுவலர் மரு.கிளிட்டன் ஜூட், காளி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பொறுப்பு மருத்துவ அலுவலர் மரு.மணிகண்டன் குத்தாலம் தாலுக்கா தீயணைப்புத் துறை அலுவலர் ஸ்ரீனிவாசன் முன்னிலையில் தீயணைப்பு ஒத்திகை விழிப்புணர்வு காளி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது.

குத்தாலம் ஸ்டேஷன் தீயணைப்புத் துறை அலுவலர் ஸ்ரீனிவாசன் மற்றும் ஃபயர் மேன் குழுவினர்களால், எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டால் அதனை எளிதாக பயமின்றி எவ்வாறு ஃபயர் எக்ட்டிங்யூசரை பயன்படுத்தி அணைப்பது மற்றும் முதலுதவி செய்வது பற்றிய விழிப்புணர்வை காளி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் மக்களுக்கு எடுத்துரைத்தனர்.

இக்கூட்டத்தில் மருத்துவர்கள், மருந்தாளுனர் , ஆய்வக நட்புநர், சமுதாய சுகாதார செவிலியர், பகுதி சுகாதார செவிலியர், கிராம சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், அலுவலர்கள், ஊழியர்கள், டெங்கு களப்பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். தீ விபத்து ஏற்பட்டால் அதை எப்படி அணைப்பது பற்றிய துண்டு பிரசாரங்கள் தீயணைப்பு துறையால் பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்டது. இறுதியில் வட்டார சுகாதார ஆய்வாளர் பாஸ்கர் அனைவருக்கும் நன்றி கூறினார்

Tags:    

Similar News