தனியார் கல்லூரியில் தீ விபத்து
தனியார் கல்லூரியில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;
By : King 24x7 Website
Update: 2023-11-01 13:42 GMT
தனியார் கல்லூரியில் தீ விபத்து
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் ஜான்சன் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி என்ற தனியார் கல்லூரி இயங்கி வருகிறது.இங்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இன்று மதியம் கல்லூரியில் உள்ள அரங்த்தில் மதியம் 2.30 மணி அளவில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.தீ மளமளவென பரவிய நிலையில் அரங்கில் இருந்து மாணவர்கள்,ஆசிரியர்கள் கட்டிடத்தில் இருந்து அலறி அடித்து கொண்டு வெளியேறினார்.இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.மூன்று வாகனங்களில் வந்த முப்பதுக்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர் கொளுந்து விட்டு எரிந்த தீயை மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.தீ விபத்தில் அரங்கில் இருந்த லட்ச கணக்கான பொருட்கள் எரிந்து நாசம் ஆனதாக கல்லூரி தரப்பில் தெரிவித்தனர்.மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.