உசிலம்பட்டி நவீன எரிவாயு தகன மேடை அருகே தீ விபத்து

உசிலம்பட்டி நகராட்சி நவீன எரிவாயு தகன மேடை அருகே குப்பை கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.;

Update: 2024-03-05 11:24 GMT

உசிலம்பட்டி நகராட்சி நவீன எரிவாயு தகன மேடை அருகே குப்பை கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.


உசிலம்பட்டி நகராட்சி நவீன எரிவாயு தகன மேடை அருகே குப்பை கிடங்கில் திடீரென தீ விபத்து. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் அமைந்துள்ள நகராட்சி நவீன எரிவாயு தகனமேடை. இதன் அருகே நகராட்சி பகுதிகளில் 24 வார்டு பகுதிகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகளை இங்கு கொட்டி விட்டு செல்கின்றனர். இந்த குப்பைகள் மலை போல் தேங்கி நின்ற நிலையில் இன்று எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டு அந்த தீ மள மளவென எரிந்து அப் பகுதியில் புகைமண்டலமாக காட்சியளித்தது.

Advertisement

இதனை அறிந்த உசிலம்பட்டி தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பலமுறை பொதுமக்கள் இங்கு குப்பைகளை கொட்டுவதால் பல்வேறு தொற்றுநோய் ஏற்படுவதாகவும் இங்கு குப்பைகளை கொட்ட வேண்டாம் என நகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததே இந்த விபத்துக்கு காரணம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

மேலும் நகராட்சி எரிவாயு தகனமேடை அருகே குப்பையிலிருந்து இயற்கை உரம் தயாரிக்கும் மையம் அமைக்கப்பட்டு இதுவரை அந்தப் பணி நடைபெறாததால் குப்பை மலை போல் தேங்கி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது .நகராட்சி தகனமேடை அருகே பெட்ரோல் பங்க் இருப்பதால் தீயணைப்பு துறை வீரர்களின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது,

Tags:    

Similar News