இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் தீத்தடுப்பு செயல் விளக்கம்
சேலம் கருப்பூரில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் தீத்தடுப்பு ஒத்திகை மற்றும் பாதுகாப்பு குறித்து செயல் விளக்க முகாம் நடந்தது.
சேலம் கருப்பூரில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் நடந்த தீத்தடுப்பு ஒத்திகை மற்றும் பாதுகாப்பு குறித்து செயல் விளக்க முகாமிற்கு கேஸ் தொழிற்சாலை துணை பொது மேலாளர் ஜெயசங்கர் தலைமை தாங்கினார். ஓசூர் தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் நலத்துறை இணை இயக்குனர் சபீனா, கியாஸ் பிளாண்ட் மேலாளர் சரத் சந்திரா, ஓமலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ், மீனா ஐ.பி.ஜி. இன்டெர்சி மேலாளர் சண்முகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து கியாஸ் நிரப்பும்போது தீ விபத்து ஏற்பட்டால் தானாக இயங்கும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் எந்திரத்தின் மூலம் தீயை தடுப்பது எப்படி?, விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் சேர்ப்பது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து இணை இயக்குனர் சபீனா பேசுகையில், தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டால் தொழிலாளர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும். ஊழியர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். அப்போதுதான் உயிர்களை காப்பாற்ற முடியும் என்றார். முடிவில் நிர்வாக அலுவலர் முருகேசன் நன்றி கூறினார்