தொடர்ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பட்டாசு ஆலைகள் வேலை நிறுத்தம்

விருதுநகர் மாவட்டத்தில் சரவெடிக்கு அனுமதி கோரியும், பட்டாசு ஆலைகளில் நடைபெறும் தொடர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பட்டாசு ஆலைகள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டனர்

Update: 2024-02-20 11:30 GMT

பட்டாசு ஆலைகள்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் வெம்பக்கோட்டை ,தாயில் பட்டி, ஏழாயிரம் பண்ணை,துலுக்கன்குறிச்சி, செவல்பட்டி, பனையடிப்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன.

வெம்பக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெரும்பாலான பட்டாசு ஆலைகள் மாவட்ட வருவாய் அலுவலர் அனுமதி பெற்று சரவெடிகள் மட்டும் தயாரிக்க அனுமதி பெற்ற  பட்டாசு ஆலைகள் தான் அதிகம் இயங்கி வருகிறது. இங்கு சரவெடிகள் மட்டுமே தயாரிக்க வேண்டும் வேறு பட்டாசுகள் தயாரிக்க அனுமதி கிடையாது மேலும் சரவெடிகளுக்கு மாற்றாக வேறு பட்டாசுகள் தயாரிக்கவும் பேரியம் நைட்ரேட் வேதிப்பொருளுக்கு பதிலாக மாற்று பொருள் எதுவும் இதுவரை சுப்ரீம் கோர்ட்டு கூறிய வழி முறையில் மத்திய அரசு பட்டாசு ஆலைகளுக்கு தெரிவிக்க வில்லை வழங்கவும் இல்லை.

ஆனால் பட்டாசு ஆலைகளில் தடையும் தொடர் ஆய்வும் அச்சுருத்தலும் நடத்தி வருவதால் பட்டாசு ஆலை உரிமையாளர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 2018ல் உச்சநீதிமன்றத்தில் பட்டாசு வெடிப்பதால் ஒலி மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக பட்டாசு உற்பத்திக்கு தடைவிதிக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் பேரியம் பயன்படுத்தவும் சரவெடி தயாரிக்கவும் உச்சநீதிமன்றம் தடை விதித்தது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சுற்றுச்சூழலை பாதுகாப்பவர்கள் பசுமை பட்டாசுகளை தயாரிக்கலாம் என பட்டாசு உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

  அதற்காக பட்டாசு உரிமையாளர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது மத்திய அரசு இதுவரை எந்தவிதமான மாற்று பொருள் வழங்காத நிலையில் தமிழக அரசின் மாவட்ட வருவாய் துறை அலுவலர்களும் ஆய்வு என்று பெயரில் தொடர்ந்து பட்டாசு தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களை நெருக்கடியில் வைப்பதுடன் அச்சுறுத்துவதையும் வஞ்சிப்பதையும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தழை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் புகையிலை தடை செய்யப்பட்டும் கூட பொதுமக்களுக்கு மிக எளிதில் கிடைக்கக்கூடிய வகையில் அரசு கண்டும் காணாமல் இருந்து வரும் நிலையில் பல லட்சம் மக்களின் வாழ்வாதாரமாக திகழும் பட்டாசு தொழிலுக்கு மட்டும் ஏன் ஓரவஞ்சனையாக அரசு மற்றும் அதிகாரிகள் கடும் கட்டுப்பாடுகளை விதைத்து தடையை நீடித்து வருவது ஏன் என்று தெரியவில்லை.

சாத்தூர் மற்றும் வெம்பக்கோட்டை பகுதியில் எங்கள் சங்கத்தில் உள்ள 150 தொழிற்சாலைகள் மற்றும் சங்க உறுப்பினர் அல்லாத ஏனைய தொழிற்சாலைகளையும் சேர்த்து சுமார் 250க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிற்சாலைகள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சரவெடி தயாரிப்பிற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நீடித்து வரும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கா விட்டால் அனைத்து உரிமையாளர்கள் மற்றும் பட்டாசு ஆலை தொழிலாளர்களின் ஒருங்கிணைத்து கடுமையான போராட்டத்தை நடத்த வேண்டிய சூழல் நிலவும் என்று சங்கத்தின் மூலம் தெரிவித்துக் கொள்வதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News