சிவகாசி: தொடர் மழையால் பட்டாசு உற்பத்தி கடும் பாதிப்பு

சிவகாசியில் தொடர் மழையால் பட்டாசு உற்பத்தி கடும் பாதிப்பு...

Update: 2024-05-18 04:38 GMT
சிவகாசியில் தொடர் மழையால் பட்டாசு உற்பத்தி கடும் பாதிப்பு...

விருதுநகர் மாவட்டம், சிவகாசி சுற்றுப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.சிவகாசி மற்றும் அதன் சுற்றுபுற கிராம பகுதிகளில் சுமார் 1070 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன.இந்த பட்டாசு ஆலைகளில் வரும் தீபாவளி பண்டிக்கைக்காக பட்டாசு தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பட்டாசு தொழிலுக்கு மிகவும் உதவி செய்வது சுட்டெரிக்கும் வெயில் தான்.ஆனால் சிவகாசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 4நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.இதனால் பட்டாசு உற்பத்தி முழுமையாக பாதிப்பில் உள்ளது.சற்று ஈரப்பதம் இருந்தாலும் பட்டாசு உற்பத்தி செய்ய வழியில்லை. மழையின் போது மருந்து கலவைகளை வெடிகளில் செலுத்தி உலர வைக்க முடியாது. மழை தொடரும் பட்சத்தில் உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இதனால் தொழிலாளர்களும் வேலை வாய்ப்பு இன்றி சிரமப்படுகின்றனர்.ஏற்கனவே தொடர் வெடி விபத்து,தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.கடந்த சில வாரங்களாக சிவகாசியில் கடுமையான வெயில் வாட்டி வதைத்த நிலையில்.தொடர் மழை மக்களுக்கு மகிழ்ச்சியை தந்தாலும் சிவகாசி பட்டாசு தயாரிப்பாளர்கள், தொழிலாளர்களுக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News