புதிய சட்ட திருத்தத்தின் கீழ் குமரியில் முதல் வழக்கு பதிவு

புதிய சட்ட திருத்தத்தின் கீழ் கன்னியாகுமரியில் முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-07-02 14:20 GMT

காவல் நிலையம்

இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகிய சட்டங்களுக்கு பதிலாக பாரதிய நியாய சன்கிதா ( பி என் எஸ்) பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்கிதா (பி என் எஸ் எஸ்) பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் மத்திய அரசால் கொண்டுவரப் பட்டுள்ளன.      

இந்த புதிய சட்டங்கள் நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளன. இந்த புதிய சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் என்று தமிழக முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு மாநிலங்களில் இந்த சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.    

  திட்டமிட்டபடி நேற்று முதல் இந்த சட்ட திருத்தம் அமலுக்கு வந்ததை ஒட்டி புதிய சட்டங்களின்படி வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை தொடங்கியிருக்கின்றன.       அந்த வகையில் நேற்று மாலை வரை குமரி மாவட்டத்தில் மொத்தம் ஆறு வழக்குகள் புதிய சட்ட திருத்தங்களின்படி பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதில் முதல் வழக்கு நேற்று அதிகாலை 2. 15 மணிக்கு கன்னியாகுமரி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 

அதிவேகமாக வாகன இயக்குதல் பிரிவு என்று வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டிலேயே கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் தான் புதிய சட்டத்தின் கீழ் முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags:    

Similar News