மனைவி பிரிந்து சென்றதால் தற்கொலை
தூத்துக்குடியில் மனைவி பிரிந்து சென்றதால் மீனவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-04-29 08:06 GMT
தற்கொலை
தூத்துக்குடியில் மனைவி பிரிந்து சென்றதால் மீனவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,
தூத்துக்குடி இனிகோ நகரை சேர்ந்தவர் அருள்ராஜ் மகன் பிரபாகரன் (39). மீனவரான இவருக்கு திருணமாக மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இவர் தினசரி மதுபோதையில் வீட்டுக்கு செல்வதால் கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டதாம். இதனால் அவரது மனைவி குழந்தைகளை அழைத்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டாராம்.
இதில் மனம் உடைந்த பிரபாகரன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்