பாழடைந்த கிணற்றில் விழுந்த மீனவர் சாவு
கன்னியாகுமரி பாழடைந்த கிணற்றில் விழுந்து மீனவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மேல கிருஷ்ணன் புதூர் பகுதியை சேர்ந்தவர் லீனஸ் (70). மீனவர் இவர் சம்பவ தினம் கடலில் மீன்பிடிக்க செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றுள்ளார். பிறகு அவர் வீடு திரும்பவில்லை இதனால் அவர் கடலில் தங்கி இருந்து மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு இருப்பார் என உறவினர்கள் நினைத்திருந்தனர். இந்த நிலையில் இலந்தவிளை என்ற பகுதியிலுள்ள ஒரு தண்ணீர் இல்லாத பாழடைந்த கிணற்றில் லீனஸ் விழுந்து கிடப்பதாக உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது.
அங்கு சென்று அவரை மீட்டபோது மயங்கிய நிலையில் காணப்பட்டார். உடனடியாக அவரை அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லீனஸ் உயிரிழந்தார். இது குறித்து லீனஸ் மகன் சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, எப்படி பாழடைந்த பாழடைந்த கிணற்றில் விழுந்தார்? என்ன நடந்தது என்று விசாரணை நடத்தி வருகின்றனர்