குமரி கலெக்டர் அலுவலகத்தில் மீனவர் குறைதீர்க்கும் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.;

Update: 2023-10-28 03:20 GMT

 மீனவர் குறைதீர் கூட்டம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
இந்த கூட்டத்திற்கு சார் ஆட்சியர் கவுஷக், முன்னிலை வகித்தார்.  மற்றும் அலுவலர்கள், மீனவ பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் மீனவப் பிரதிநிதிகளால், தேங்காய்பட்டணம், இரையுமன்துறையில் அமைக்கப்பட்டுள்ள கட்டமைப்புகளை பயன்படுத்தி மீன் விற்பனை செய்திட வேண்டும் எனவும்,  தேங்காய்பட்டண மீன்பிடி துறைமுகத்தில் வள மீன்கள் இறக்கிடவும் மீனவர்கள் தொழில் செய்திட வசதியாக நாட்டுபடகுகள், விசை படகுகள் நிறுத்துவதற்கான வசதிகள் அமைத்திட வேண்டும் எனவும், மணலை ஆழப்படுதத வேண்டும் எனவும்,  தேங்காய்பட்டண மீன்பிடி துறைமுக பணிகளை விரைவில் முடித்திடவும பணிகளை வடிவமைக்கும் பொறியாளரின் நேரடி பார்வையின் கீழ் பணிகள் செய்யப்பட வேண்டும் எனவும், கோரிக்கை விடுக்கப்பட்டது.  இதனை தொடர்ந்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களால் பதில் விவரம் தெரிவிக்கப்பட்டது.  தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுக பணிகள் தொடர்பாக 15 நாட்களுக்கு ஒருமுறை சார் ஆட்சியர் அவர்கள் தலைமையில் கூட்டம் நடத்தப்படுகிறது எனவும், கல்குவாரியிலிருந்து கற்கள் வராததால் பணிகள் நடைபெறவில்லை, எனவே, விரைவில் பணிகள் நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூறினர்
Tags:    

Similar News